பாஜகவில் இணைந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்

பாரதிய ஜனதா கட்சியில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டூடியோஸின் கோட்டபாடி ராஜேஷ்...
பாஜகவில் இணைந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்

பாரதிய ஜனதா கட்சியில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டூடியோஸின் கோட்டபாடி ராஜேஷ் இன்று இணைந்துள்ளார். 

அறம், ஐரா, குலேபகாவலி, தும்பா, க/பெ. ரணசிங்கம் போன்ற படங்களை கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பாகத் தயாரித்தவர் கோட்டபாடி ராஜேஷ். ஆரம்பத்தில் தனியார் வங்கியில் தென்னிந்தியத் தலைவராக இருந்தவர், பிறகு வேலையை உதறி கேஜேஆர் ஸ்டூடியோஸ் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். ராஜேஷின் பூர்வீகம் செங்கல்பட்டு.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்துள்ளார் கோட்டபாடி ராஜேஷ். பாஜகவின் தமிழகத் தலைவா் எல். முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார்.

கடந்த மாதம், பாரதிய ஜனதா கட்சியில் நடிகை குஷ்பு இணைந்தார். அந்தக் கட்சியில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் கட்சி உறுப்பினர்களாக உள்ளார்கள். குஷ்பு, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, ராதாரவி, கெளதமி, நமீதா, விஜயகுமார், காயத்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி. சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் எனத் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com