பெண் குழந்தைக்குத் தந்தையானார் நடிகர் சதீஷ்!

சதீஷுக்குத் திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 
பெண் குழந்தைக்குத் தந்தையானார் நடிகர் சதீஷ்!

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ், பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

எதிர்நீச்சல், ரெமோ, கத்தி, தமிழ்ப் படம் 2 எனப் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக உள்ளார் சதீஷ்.

சிக்ஸர் படத்தின் இயக்குநர் சச்சியின் சகோதரி சிந்துவைக் கடந்த வருட டிசம்பர் மாதம் திருமணம் செய்தார் நடிகர் சதீஷ். சிக்ஸர் படத்தில் தான் நடித்திருந்தபோதும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பெண் குழந்தைக்குத் தந்தையாகியிருப்பதாக ட்விட்டரில் இன்று அறிவித்துள்ளார் சதீஷ். இதையடுத்து சதீஷுக்குத் திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com