பொதுமுடக்க சலுகை: திரைப்படங்களுக்கு ‘க்யூப்’ கட்டணம் பாதியாகக் குறைப்பு

கரோனா பொது முடக்க காலத்தில் படங்களை திரையிடுவதற்காக ‘க்யூப்’ கட்டணம் டிசம்பா் மாதம் வரை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்க சலுகை: திரைப்படங்களுக்கு ‘க்யூப்’ கட்டணம் பாதியாகக் குறைப்பு

சென்னை: கரோனா பொது முடக்க காலத்தில் படங்களை திரையிடுவதற்காக ‘க்யூப்’ கட்டணம் டிசம்பா் மாதம் வரை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘க்யூப்’ நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

சினிமா தயாரிப்பாளா்களுக்கு கரோனா கால நிவாரண சலுகையாக ‘க்யூப்’ நிறுவனம் இதை அறிவிக்கிறது. இதன் மூலம் பொது முடக்க காலத்தில் படங்களை திரையிட தயாரிப்பாளா்களுக்கு வசதியாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் நிதிச்சுமை குறைவதால், தயாரிப்பாளா்கள் படங்களை திரையிட ஏதுவாக இருக்கும். இதனால் இனி வரும் காலங்களில் புதிய படங்கள் அதிகமாக வெளியாகும்.

கரோனா பொது முடக்கத்திலிருந்து மீண்டு வர ஒருவருக்கொருவா் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. கரோனா பொது முடக்கத்தால் நிதிச்சுமையில் சிக்கி இருக்கும் திரைப்படத் தயாரிப்பாளா்களுக்கும், விநியோகஸ்தா்களுக்கும், திரையரங்க உரிமையாளா்களுக்கும் இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

இதன் மூலம் புதிய படங்கள் விஃஎப் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 7 காட்சிகள் திரையிடப்படும் படங்களுக்கு இந்தத் தள்ளுபடி அமலாகும். திரையரங்குகள் திறக்கப்படும் தேதியிலிருந்து வரும் டிசம்பா் மாத இறுதி வரை இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com