முரளிதரன் பயிற்சியாளராக உள்ள சன்ரைசர்ஸ் அணியை ஏன் கேள்வி கேட்கக்கூடாது?: விஜய் சேதுபதிக்கு ராதிகா ஆதரவு

விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு வேறு வேலை இல்லையா...
முரளிதரன் பயிற்சியாளராக உள்ள சன்ரைசர்ஸ் அணியை ஏன் கேள்வி கேட்கக்கூடாது?: விஜய் சேதுபதிக்கு ராதிகா ஆதரவு

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு வேறு வேலை இல்லையா என்று நடிகை ரதிகா கேள்வி எழுப்பியுள்ளார். 

133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 வருட இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் உருவாகும் இப்படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படும்.

எனினும்  இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. 

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ராதிகா, ட்விட்டரில் கூறியதாவது:

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு வேறு வேலை இல்லையா? சன்ரைசர்ஸ் அணியை ஏன் கேட்கக்கூடாது? முரளிதரன் அதில் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். அந்த அணி அரசியல் தொடர்புடைய தமிழருடையது. விஜய் சேதுபதி ஒரு நடிகர். அவரைத் தடுக்கவேண்டாம். விஜய் சேதுபதி, கிரிக்கெட் இரண்டுக்கும் முட்டாள்தனம் தேவையில்லை என்றார்.

பிறகு சன் டிவி பற்றிய தனது கருத்துகளுக்கு விளக்கமளித்து அவர் மேலும் ட்வீட் செய்ததாவது:

சன்ரைசர்ஸ், சன் டிவியின் உரிமையாளர்களுக்கு அரசியல் தொடர்பு இருந்தாலும் இத்தனை ஆண்டுகளாக அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவற்றைத் தொழில்ரீதியாக அணுகியுள்ளார்கள். நம் திரைத்துறையும் கேளிக்கையை அரசியல் கோணத்தில் பார்ப்பதை ஏன் தவிர்க்கக்கூடாது?

என்னுடைய அந்த ட்வீட்டின் நோக்கம், சர்ச்சையை உருவாக்குவதல்ல. திரைத்துறைக்கும் அதன் கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பதுதான். அதனால்தான் நடுநிலைமையுடன் தொழில்ரீதியாக அணுகுவதில் சான்றாக உள்ள சன்ரைசர்ஸை உதாரணமாகக் கூறினேன் என்றார். 

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com