தொடங்கியது தெலுங்கு பிக் பாஸ்: 16 போட்டியாளர்களின் விவரங்கள்! (படங்கள்)

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 16 போட்டியாளர்களின் விவரங்கள்..
தொடங்கியது தெலுங்கு பிக் பாஸ்: 16 போட்டியாளர்களின் விவரங்கள்! (படங்கள்)

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 16 போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. 

பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கமல் நடித்த இந்நிகழ்ச்சி தொடர்பான விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று முதல் ஸ்டார் மா தொலைக்காட்சியில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 2-வது வருடமாக பிரபல நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கும் சனி, ஞாயிறு கிழமைகளில் இரவு 9 மணிக்கும் நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு பிக் பாஸ் 4 போட்டியாளர்கள்:

மோனல் கஜ்ஜார் (நடிகை)

தமிழ் பிக் பாஸ் போல அல்லாமல் மற்ற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் உள்ளூர்க்காரர்களுக்கே அதிகமாக வாய்ப்பளிக்கப்படும். இந்த வருடத் தெலுங்கு பிக் பாஸில் இடம்பெற்றுள்ள வெளி மாநிலப் போட்டியாளர் இவர் மட்டும் தான். குஜராத்தைச் சேர்ந்த மோனல் கஜ்ஜார், 2012-ல் தெலுங்குப் படத்தில் நடித்துத் திரையுலகில் அறிமுகமானார். மிஸ் குஜராத் படம் வென்றவர். இதுவரை ஏராளமான குஜராத்தி, தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இரு தமிழ்ப் படங்களிலும் நடித்தவருக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய திருப்புமுனையாக அமையலாம். 

அபிஜீத் (நடிகர்)

சேகர் கம்முல்லா இயக்கிய லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் படத்தில் நடித்தவர். 

சுஜாதா (தொலைக்காட்சித் தொகுப்பாளர்)

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றி அனைவருக்கும் அறிமுகம் ஆனவர். 

மெஹபூப் தில்சே (நடிகர்)

நடிகர், நடனக் கலைஞர். டிக்டாக்கில் விடியோக்களை வெளியிட்டுப் பிரபலமானவர். இன்ஸ்டகிராம், யூடியூப் தளங்களிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

தேவி நாகவள்ளி (பத்திரிகையாளர்)

டிவி9 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 

ஹரிகா (யூடியூப் பிரபலம்)

யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர். 

சையத் சோஹல் ரையன் (நடிகர்)

யுரேகா என்கிற ஆக்‌ஷன் படத்தில் நடித்தவர்.

அரியானா குளோரி (தொலைக்காட்சித் தொகுப்பாளர்)

ஜெமினி காமெடி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். பிரபலங்களைப் பேட்டியெடுத்து கவனம் பெற்றவர்.

திவி (நடிகை)

தெலுங்குப் படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்தவர்.

அகில் சர்தக் (நடிகர்)

மாடலான அகில், தொலைக்காட்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி படங்களிலும் நடித்துள்ளார்.

கங்காவா (யூடியூப் பிரபலம்)

மை வில்லேஜ் ஷோ என்கிற யூடியூப் சேனல் மூலம் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர்.

சூர்யா கிரண் (இயக்குநர்)

சத்யா, தனா 51 படங்களை இயக்கியவர். 

லஸ்யா (தொலைக்காட்சித் தொகுப்பாளர்)

சம்திங் ஸ்பெஷல் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி கவனம் பெற்றார். நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றி அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர்.

அம்மா ராஜசேகர் (இயக்குநர், நடன இயக்குநர்)

நடன இயக்குநராக இருந்து இயக்குநராக மாறியவர். ரணம், கதார்நாக் படங்களின் மூலம் கவனம் பெற்றவர்.

கராத்தே கல்யாணி (நடிகை)

தெலுங்குப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

நோயல் சீன் (நடிகர்)

இசைக்கலைஞரான நோயல் பல தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com