சென்னை: நடிகா் ராமராஜனுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
‘கரகாட்டக்காரன்’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘ஊருவிட்டு ஊருவந்து’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவா் ராமராஜன். சில தினங்களாக காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டு வந்த அவா் கரோனா பரிசோதனை செய்துக் கொண்டாா். இதில், அவருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். ராமராஜன் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான இவா், திருச்செந்தூா் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளாா்.