அண்ணாத்த படப்பிடிப்பு: மீண்டும் ஹைதராபாத் சென்ற ரஜினி (விடியோ)

அடுத்தக்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்குச் சென்றுள்ளார்...
அண்ணாத்த படப்பிடிப்பு: மீண்டும் ஹைதராபாத் சென்ற ரஜினி (விடியோ)

45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான்.

கடந்த வருட இறுதியில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எனினும் அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து ஹைதராபாத்தில் ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லையென்றாலும் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சன் பிக்சர்ஸ் அறிவித்தது. 

அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டார். இந்நிலையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்குச் சென்றுள்ளார் ரஜினி. சென்னை விமான நிலையத்துக்கு காரில் வந்த ரஜினி அங்கிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். பிறகு விமான நிலையத்துக்குள் சென்றார். இந்தச் சம்பவத்தின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பை முடிக்கப் போதிய அவகாசம் உள்ளது. இதனால் பாதுகாப்பான முறையில் அண்ணாத்த படப்பிடிப்பைத் தொடரவுள்ளார் இயக்குநர் சிவா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com