விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர், கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் மலராக நடித்த பவித்ராவும், வெற்றியாக திரவியமும் நடித்தனர்.
இதையும் படிக்க | தோனியுடன் நடிகர் விஜய் சந்திப்பு
வெற்றி - மலர் ஜோடிக்காகவே இந்தத் தொடரை பார்ப்பவர்கள் ஏராளம். சமீபத்தில் இந்தத் தொடரில் வெற்றிக்கும், மலருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. இப்பொழுது தான் இந்த தொடர் அதிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருப்பதாக ரசிகர்கள் கருதிய நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிக்க | நடிகை திவ்யா துரைசாமியின் சமீபத்திய புகைப்படங்கள்
படக்குழுவினர் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியலின் இறுதிக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேப் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அன்புடன் குஷி தொடரும் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்திகள் தொடர்ச்சியாக மேற்கண்ட தொடர்களைப் பார்க்கும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.