
'ஆர்எக்ஸ் 100' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் கார்த்திகேயா கும்மகொண்டா. தொடர்ந்து நானி கதாநாயகனாக நடித்து கடந்த 2019 ஆம் வருடம் வெளியான 'கேங் லீடர்' படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார்.
இது மட்டுமல்லாமல் தமிழில் நடிகர் அஜித்தின் 'வலிமை' படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மேலும் கதாநாயகனாக 'ராஜா விக்ரமர்கா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்திகேயா சுட்டுரைப் பக்கத்தில் தனது திருமணம் குறித்து அறிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், 'எனது நண்பரும், வருங்கால வாழ்க்கை துணையுமான லோஹிதாவுடன் நடைபெறவிருக்கும் திருமண அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு லோஹிதாவை சந்தித்தேன். தற்போதும் அந்த நேசம் தொடர்ந்து கொண்டிருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Feeling elated to announce my engagement with my best friend who now is my partner for life..
— Kartikeya (@ActorKartikeya) August 23, 2021
From 2010when i first met #Lohitha in nitwaranagal to now and many more such decades.. pic.twitter.com/xXYp7pcH4K