
நகைச்சுவை நடிகர் சதிஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் நாய் சேகர். லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சதிஷுக்கு ஜோடியாக பவித்ரா நடிக்க, ஜார்ஜ் நாராயண், இளவரசு, லிவிங்ஸ்டன், ஸ்ரீமன், மனோபாலா, கேபிஒய் பாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் அனிருத் ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுத அனிருத் பாடியுள்ளார்.