
கரோனா தொற்றில் இருந்து மீண்ட நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது முறையாக அபிஷேக் வெளியேறினார்.
இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இமான் அண்ணாச்சி வெளியேறுகிறார். பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்திருப்பதில் இமான் பெரும் பங்கு வகித்தார். அவரது நேர்மறையான நடவடிக்கைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.
இதையும் படிக்க | நடிகையாகும் முன் மருத்துவரான இயக்குநர் ஷங்கரின் மகள்
68 நாட்களுக்கு பிறகு இமான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இமானுக்கு வருண், ராஜு ஆகியோருடன் நல்ல நட்பு இருந்தது. ரசிகர்களின் ஆதரவு பெற்ற போட்டியாளரான இமான் வெளியேறுவதால் பிக்பாஸ் வீடு பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.