Enable Javscript for better performance
அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள த்ரிஷ்யம் 2 படத்தின் டீசர்- Dinamani

சுடச்சுட

    

    அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள த்ரிஷ்யம் 2 படத்தின் டீசர்

    By DIN  |   Published on : 01st January 2021 12:32 PM  |   அ+அ அ-   |    |  

    drishyam2_malayalam

     

    மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013-ல் வெளியான படம் த்ரிஷ்யம்.

    கேரளாவில் மகத்தான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்கிற பெயரில் வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது.

    மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 உருவாகியுள்ளது. ரூ. 50 கோடி வசூலைப் பெற்ற முதல் மலையாளப் படம் என்கிற பெருமை த்ரிஷ்யம் படத்துக்கு உண்டு. இதனால் இதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    மோகன் லால், த்ரிஷா நடிப்பில் ராம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தபோது இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. த்ரிஷ்யம் 2 பணிகள் முடிவடைந்த பிறகு ராம் படப்பிடிப்பை ஜீத்து ஜோசப் தொடங்கவுள்ளார்.

    கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி 46 நாள்களில் த்ரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் 56 நாள்களில் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட நிலையில் 10 நாள்களுக்கு முன்பே படப்பிடிப்பை முடித்துள்ளார் ஜீத்து ஜோசப். 

    திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷ்யம் 2 படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இத்தகவலை மோகன் லால் தெரிவித்துள்ளார். ஜார்ஜ்குட்டியும் அவருடைய குடும்பத்தினரும் விரைவில் அமேசான் பிரைம் விடியோ வழியாக வரவுள்ளார்கள் என்று கூறி ஃபேஸ்புக்கில் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். 

     
    Drishyam2 | Official Teaser

    Georgekutty and his family are coming soon on Amazon Prime Video #Drishyam2OnPrime Happy New Year #MeenaSagar Jeethu Joseph Antony Perumbavoor Aashirvad Cinemas Drishyam Satheesh Kurup

    Posted by Mohanlal on Thursday, December 31, 2020

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp