Enable Javscript for better performance
Eeswaran release threatened STR and producer get strong support- Dinamani

சுடச்சுட

    

    சிம்புவின் ஈஸ்வரன் படம் சொன்ன தேதியில் வெளியாகும்: புதிய தயாரிப்பாளர் சங்கம்

    By DIN  |   Published on : 01st January 2021 11:13 AM  |   அ+அ அ-   |    |  

    eeswaran_90

     

    சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள் என தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் - ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இசை - தமன். ஒரு மாதத்துக்குள் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துத் தந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சிம்பு. ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் டி. ராஜேந்தர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

    ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிடுவது தொடர்பாகப் பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. அஅஅ (அன்பானவன், அசராதவன், அடங்காதவன்) படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ படத் தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த கரோனா பிடியிலிருந்து மீண்டு வந்துவிட மாட்டோமா என்று அத்தனை பேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நாம் வரவேற்பு கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும் போன் செய்து இந்தப் படம் வெளியாக வேண்டும் என்றால் அஅஅ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்ட வேண்டும் என்று சொல்வது எந்தவகையிலும் நியாயம் இல்லை. அந்த தீய சக்திகளுக்கு வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
     
    சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்கபலமாக இருக்கும். அஅஅ படம் சம்பந்தமாக நிறைய பிரச்னைகள் இருந்தன. அதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த படத்தின் கதாநாயகன் சிம்புவும் அவருடைய சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளார். மீண்டும் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. அஅஅ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை. அதன்பிறகு சங்கம் மூலமாக பேசியும், கட்டப்பஞ்சாயத்து மூலமாகப் பேசியும் எந்தவிதப் பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு, நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
     
    எனவே இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தில்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு நாங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கிக் கொடுத்துவிடுவோம் என்று சொன்னால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் மீண்டும் ஒருமுறை எங்களது கண்டத்தைத் தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp