தீபாவளிக்கு அண்ணாத்த!

​ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு அண்ணாத்த!


ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. கரோனா பொது முடக்கம் காரணமாக அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் பொது முடக்க விதிமுறைகளுடன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. 

எனினும், படப்பிடிப்பில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து படப்பிடிப்பு தள்ளிவைக்கப்படுவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் 23-ம் தேதி அறிவித்தது.

இந்த நிலையில் அண்ணாத்த படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுபற்றிய சுட்டுரைப் பதிவில் அண்ணாத்த தீபாவளி என்ற ஹேஷ்டேக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அண்ணாத்த படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாகவும் ரஜினியின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுவரை 75 சதவிகித படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com