இளையராஜா இசையில் ஹீரோவாக நடிக்கும் சீரியல் நடிகர்

விஜய் டிவியின் 'அன்புடன் குஷி' புகழ் பிரஜின், இளையராஜா இசையில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


விஜய் டிவியின் 'அன்புடன் குஷி' புகழ் பிரஜின், இளையராஜா இசையமைக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அன்புடன் குஷி' என்ற நாடகம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். அதில் நடிக்கும் பிரஜின் 'நினைவெல்லாம் நீயடா' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 

நடிகர் காளி வெங்கட், பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான நடிகை மதுமிதா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜையின் போது இளையராஜாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரஜின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இளையராஜாவின் இசையில் நடிப்பது குறித்து மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை பிரஜினின் மனைவியும், நடிகையுமான சாண்ட்ராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கணவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். துவக்கத்தில் சின்னத்திரைத் தொகுப்பாளராக ரசிகர்களைக் கவர்ந்த பிரஜின், 'மணல் நகரம்', 'பழைய வண்ணாரப்பேட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com