ஜப்பானில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடும் ரஜினிகாந்த்தின் 'தர்பார்' - மாபெரும் வெற்றி

ஜப்பானில் ரஜினிகாந்த்தின் தர்பார் திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 
ஜப்பானில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடும் ரஜினிகாந்த்தின் 'தர்பார்' - மாபெரும் வெற்றி

ஜப்பானில் ரஜினிகாந்த்தின் 'தர்பார்' திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக அளவில் வெறித்தனமான ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரது ஸ்டைல் கலந்த நடிப்பு, தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து நாட்டு ரசிகர்களையும் கவரக்கூடிய அளவுக்கு தனித்துவம் வாய்ந்தது.

குறிப்பாக ரஜினிகாந்தின் 'முத்து' திரைப்படம் ஜப்பான் நாட்டில், மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அங்கு ரஜினிகாந்த்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பாபா படம் வெளியான நேரத்தில் ஜப்பான் நாட்டு ரசிகர்கள் தமிழகம் வந்தனர். அவர்கள் அனைவரும் பாபா படத்தில் உள்ள ரஜினிகாந்த்  போல் தாங்களும் தலைப்பாகை அணிந்து வந்து படம் பார்த்தனர்.

அந்த அளவுக்கு ரஜினியின் மேல் அவர்களுக்கு ஈர்ப்பு உருவாகியிருந்தது. மேலும் ஒவ்வொரு பட வெளியிட்டின்போதும் அவர்கள் தமிழகம் வருவது வழக்கம். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான 'தர்பார்' படம் தற்போது ஜப்பானில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 

திரையிடப்பட்ட திரையரங்குகளில் எல்லாம் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக அங்கு அரங்கம் நிறைந்த காட்சிகளாக அங்கு ஒளிபரப்பாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறப்புக் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். தர்பார் தமிழ்நாட்டில் வெளியான போது கலவையான விமரிசனங்களையே  பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com