நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ஆர். காலமானார். அவருக்கு வயது 73.
மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி படங்களை போன்ற படங்களைத் தயாரித்தவர் ஜி.ஆர். என்கிற ஜி. ராமசந்திரன். நாட்டுப்புறப் பாட்டு, எட்டுப்பட்டி ராசா, வீரத்தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் ஜி.ஆர். இன்று காலமானார். இத்தகவலைத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.