நடிகை ரிச்சாவுக்கு ஆண் குழந்தை (படங்கள்)

செல்வராகவன், சிம்பு படங்களில் நடித்த ரிச்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை ரிச்சாவுக்கு ஆண் குழந்தை (படங்கள்)

செல்வராகவன், சிம்பு படங்களில் நடித்த ரிச்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாக அறிமுகமான ரிச்சா, அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் மயக்கம் என்ன படத்தில் நடித்தவர் பிறகு சிம்பு நடித்த ஒஸ்தி படத்திலும் நடித்தார். பிறகு வரிசையாக தெலுங்குப் படங்களில் நடித்தவரைப் பற்றி சில வருடங்களாகத் தகவல்கள் எதுவும் இல்லை.

தான் நடிப்பை விட்டு விலகியுள்ளதாக 2017-ல் ட்விட்டரில் அறிவித்தார் ரிச்சா. பிறகு, ஜோ என்கிறவரைக் காதலித்து 2019-ல் திருமணம் செய்தார். அமெரிக்காவில் தற்போது வசிக்கும் ரிச்சா, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ரிச்சா தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த மே 27 அன்று ஆண் குழந்தை பிறந்ததாக இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார் ரிச்சா. லுகா ஷான் லங்கேல்லா என மகனுக்குப் பெயரிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com