தனுஷ் - செல்வராகவனின் நானே வருவேன்: ஆகஸ்டில் படப்பிடிப்பு

தனுஷ் - செல்வராகவன் இணையும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ளது.
தனுஷ் - செல்வராகவனின் நானே வருவேன்: ஆகஸ்டில் படப்பிடிப்பு

தனுஷ் - செல்வராகவன் இணையும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ளது.

செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். அதேபோல செல்வராகவனின் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, என்ஜிகே, செல்வராகவன் இயக்கிய தெலுங்குப் படம் எனப் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. செல்வராகவன் இயக்கி இன்னும் வெளிவராத நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி ஆகிய இரு படங்களுக்கும் யுவன் தான் இசை. 

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பை செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார். 8-வது முறையாக யுவனுடன் இணைகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா.

நானே வருவேன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 முதல் தொடங்கும் என இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார். இப்படத்தின் 2-வது பாடலுக்கு இசையமைத்து வருகிறேன். நீங்கள் அனைவரும் விரைவில் அதைக் கேட்க ஆவலாக உள்ளேன் என யுவன் ட்வீட் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com