
உங்கள் இதயத்திலும் இந்து மதத்தின் மீது மரியாதை இருந்தால் நன்றாக இருக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரபல இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: உங்கள் இதயத்திலும் இந்து மதத்தின் மீது மரியாதை இருந்தால் நன்றாக இருக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரபல இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இந்துக்களின் புனித யாத்திரைக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் உங்கள் இதயத்திலும் இந்து மதத்தின் மீது மரியாதை இருந்தால் நன்றாக இருக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விஜய் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பேரரசு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக தலைவர் மரியாதைக்குரிய திரு.ஸ்டாலின் அவர்களுக்கு, தங்கள் தேர்தல் அறிக்கையில் இந்துக்களின் புனித யாத்திரைக்கு நிதியுதவி அளிப்பதாய் கூறியிருந்தீர்கள் மகிழ்ச்சி! ஆனால் இந்துக்களுக்கு அந்த உதவி வேண்டாம். வேறொரு உதவி செய்யுங்கள்.
இந்து மதத்தின் புனிதத்தை கெடுக்கும்படி பேசுபவர்களை கிட்டே சேர்க்காதீர்கள், இந்துமதத்தை இழிவாய் பேசுபவர்களோடு கூட்டணி வைக்காதீர்கள், உங்கள் கட்சியில் இந்து மதத்தை கேலி, கிண்டல் செய்து அதன் புனிதத்தை கெடுப்பவர்களை உங்கள் கட்சியைவிட்டே தூக்குவேன் என்று உறுதியளியுங்கள், இந்து மதத்தை மட்டுமல்ல யார் எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் தூக்கி எறியுங்கள், எங்களுக்கு இன்னொரு ஆசை தேர்தல் அறிக்கையில் மட்டுமின்றி உங்கள் இதயத்திலும் இந்து மதத்தின் மீது மரியாதை இருந்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.