ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியீடு!

ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சியை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவர்...
ஆஸ்கர் விருது (கோப்புப் படம்)
ஆஸ்கர் விருது (கோப்புப் படம்)

ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2021 பிப்ரவரி 28-க்குப் பதிலாக ஏப்ரல் 25 அன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. நேற்று ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டது. 

ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சியை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவர்  நிக் ஜோனாஸும் தொகுத்து வழங்கினார்கள். அரவிந்த் அடிகா எழுதிய ஒயிட் டைகர் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒயிட் டைகர் படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். தான் நடித்த படம், சிறந்த திரைக்கதை (தழுவல்) விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவதை அறிவித்தபோது அவர் மிகவும் குஷியானார். தனது மகிழ்ச்சியைச் சமூகவலைத்தளங்களிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முக்கியப் படங்கள் 

சிறந்த படம்

தி ஃபாதர்
ஜுடாஸ் அண்ட் தி பிளாக் மெஸ்ஸியா
மினாரி
நோமட்லேண்ட்
பிராமிசிங் யங் வுமன்
சவுண்ட் ஆஃப் மெடல்
தி டிரையல் ஆஃப் தி சிகாகோ 7
மேங்க்

சிறந்த இயக்குநர் 

டேவிட் ஃபின்சர் (மேங்க்)
லீ இசாக் சுங் (மினாரி
எமரால்ட் ஃபென்னெல் (பிராமிசிங் யங் வுமன்)
தாமஸ் விண்டர்பெர்க் (அனதர் ரவுண்ட்)
ஜாவோ (நோமட்லேண்ட்)

சிறந்த நடிகை

வியாலோ டேவிஸ் (மா ரையினிஸ் பிளாக் பாட்டம்)
ஆண்ட்ரா டே (தி யுனைடெட் ஸ்டேட்ஸ் vs பில்லி ஹாலிடே)
வனேசா கிர்பி (பீசஸ் ஆஃப் எ வுமன்)
பிரான்சஸ் மெக்டர்மாண்ட்  (நோமட்லேண்ட்)
மேரி முல்லிகன்  (பிராமிசிங் யங் வுமன்)

சிறந்த நடிகர் 

ரிஸ் அஹமது (சவுண்ட் ஆஃப் மெடல்)
சாட்விக் போஸ்மேன் (மா ரையினிஸ் பிளாக் பாட்டம்)
ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)
கேரி ஓல்ட்மேன் (மேங்க்)
ஸ்டீவன் யுயன் (மினாரி)

சிறந்த திரைக்கதை (தழுவல்)

தி வொயிட் டைகர்
ஒன் நைட் இன் மியாமி
நோமட்லேண்ட்
தி ஃபாதர்
போரட் சப்சிகுயண்ட் மூவிஃபிலிம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com