ஹிந்தியில் பேசிய தொகுப்பாளரைக் கிண்டல் செய்த ஏ.ஆர். ரஹ்மான்!

ஹிந்தியா என்பது போல கேள்வி எழுப்பினார். பிறகு சிரிப்புடன் மேடையை விட்டு கீழே இறங்கினார்.
பாடல் வெளியீட்டு விழாவில் ரஹ்மான் (படம் - twitter.com/jiostudios)
பாடல் வெளியீட்டு விழாவில் ரஹ்மான் (படம் - twitter.com/jiostudios)

பாடல் வெளியீட்டு விழாவில் ஹிந்தியில் பேசிய தொகுப்பாளரை ரஹ்மான் கிண்டல் செய்த விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து தயாரித்த 99 ஸாங்ஸ் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள 99 ஸாங்ஸ் படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். 

இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் இப்படத்துக்குக் கதை எழுதி தயாரித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். இதனால் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 

ஏப்ரல் 16 அன்று வெளியாகவுள்ள 99 ஸாங்ஸ் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இயக்குநர்கள் ஷங்கர், கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், கே.எஸ். ரவிகுமார், கதாநாயகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஜி.வி. பிரகாஷ் போன்றோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் ரஹ்மானும் கதாநாயகன் இஹானும் மேடையில் இருந்தபோது இஹானுடன் ஹிந்தியில் பேச முயன்றார் தொகுப்பாளர். உடனே ஆச்சர்யமான ரஹ்மான், ஹிந்தி... என்பது போல கேள்வி எழுப்பினார். பிறகு சிரிப்புடன் மேடையை விட்டு கீழே இறங்கினார். அங்கிருந்தபடியே தொகுப்பாளரிடம், (உங்களிடம்) முதலிலேயே கேட்டேன், தமிழில் பேசுவீர்களா என்றார். சார், நான் தமிழில் தான் பேசிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு வரவேற்பு அளித்தேன். கோபித்துக்கொள்ளாதீர்கள் சார் என்றார் தொகுப்பாளர். சும்மா தமாஷ் பண்ணேன் என்றார் ரஹ்மான். விழாவுக்கு வந்த பார்வையாளர்கள் ரஹ்மானின் கிண்டலை மிகவும் ரசித்தார்கள். இந்தச் சம்பவத்தின் விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com