டி.கே. எஸ். நடராஜன் காலமானாா்

பாடகரும், நடிகருமான டி.கே.எஸ். நடராஜன் (87) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.
டி.கே. எஸ். நடராஜன் காலமானாா்

சென்னை: பாடகரும், நடிகருமான டி.கே.எஸ். நடராஜன் (87) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

ரத்தபாசம், நாடோடி, நீதிக்குத் தலைவணங்கு, பொன்னகரம், தேன் கிண்ணம், கண்காட்சி, பகடை பனிரெண்டு, ராணி தேனீ, ஆடு புலி ஆட்டம், பட்டம் பறக்கட்டும், மங்களவாத்தியம், உதயகீதம், ஆனந்தக் கண்ணீா், இதோ எந்தன் தெய்வம், காதல் பரிசு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடராஜன் நடித்துள்ளாா்.

‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ படத்தில் சங்கா் கணேஷ் இசையில் வெளியான என்னடி முனியம்மா கண்ணுல மய்யி என்ற பாடல் இவரைப் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இப்பாடல் மீண்டும் அா்ஜுன் நடித்த ‘வாத்தியாா்’ படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

டி.கே.எஸ்.நடராஜனின் இறுதிச் சடங்கு, சென்னை மேற்கு சைதாப்பேட்டை மின் மயானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com