சிம்பு, ஹன்சிகா நடித்த மஹா படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறதா?

ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல்
சிம்பு, ஹன்சிகா நடித்த மஹா படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறதா?


சிம்பு, ஹன்சிகா நடித்த மஹா படம் ஓடிடியில் நேரடியாக வெளியாவதாகப் பரவிய செய்திகளுக்கு அப்படத்தின் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ளார். கருணாகரன், தம்பி ராமையா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான்.

2015-ல் வெளியான வாலு படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்தார்கள். இருவரும் காதலிப்பதாக அறிவித்தவர்கள் பிறகு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துபோனார்கள். இந்நிலையில் மஹா படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் மஹா படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. 2021 கோடைகாலத்தில் படம் வெளியாகும் என அறிவித்தார் ஹன்சிகா. 

இந்நிலையில் மஹா படம் ஓடிடியில் வெளியாவதாகச் செய்தி பரவியுள்ளது. இதற்கு இயக்குநர் ஜமீல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

தவறான செய்தி. சிம்பு ரசிகர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். மஹா படம் ஆரம்பித்து நான்கு வருடங்களாகின்றன. மஹா படத்தின் கூடுதல் தகவல்களுக்கு இன்னும் சில நாள்கள் பொறுத்திருக்கவும். மஹா படத்துக்கு சிம்பு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com