61 ஆயிரம் கோடிக்கு எம்ஜிஎம் நிறுவனத்தை வாங்கிய அமேசான்!

மிகவும் புகழ்பெற்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம்-மை 61 ஆயிரத்து 375 கோடிக்கு...
அமேசான்  பிரைம் விடியோ-வில் உள்ள படங்கள் (ஸ்கிரீன் ஷாட்)
அமேசான் பிரைம் விடியோ-வில் உள்ள படங்கள் (ஸ்கிரீன் ஷாட்)

மிகவும் புகழ்பெற்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம்-மை 61 ஆயிரத்து 375 கோடிக்கு (8.45 பில்லியன் டாலர்) வாங்கியுள்ளது அமேசான் நிறுவனம்.

மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்கிற எம்ஜிஎம் நிறுவனம் பல முக்கியமான ஹாலிவுட் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1924-ல் தொடங்கப்பட்டது. ராக்கி, ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசைகள் உள்பட 4000 படங்களையும் 17,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளது. இந்த எண்ணிக்கை தான் அமேசான் நிறுவனம் எம்ஜிஎம்-மை வாங்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

எம்ஜிஎம் நிறுவனம் 4,000-க்கும் அதிகமான படங்களைத் தயாரித்துள்ளது. அப்படங்களின் மூலம் 180 ஆஸ்கர், 100 எம்மி விருதுகளை வென்றுள்ளது. எம்ஜிஎம் குழுவுடன் இணைந்து அதன் படங்களை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கவுள்ளோம். தரமான படங்களை வழங்க நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார் அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி மைக் ஹாப்கின்ஸ். 

பிரபல ஹாலிவுட் படங்களை இனிமேல் அமேசான் ஓடிடி தளத்தில் பார்க்க வாய்ப்பு உருவாகியுள்ளதால் ரசிகர்களுக்கும் இந்தச் செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com