
கடந்த பல வருடங்களாக ரசிகர்களின் மனதில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலரும் பிரபல பின்னணி பாடகர்களாக மாறியுள்ளனர்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் பலரும் தற்போது பின்னணி பாடகர்களாக கலக்கி வருகின்றனர். அவர்களுள் மாளவிகாவும் ஒருவர். டி.இமான் இசையில் சிவகார்த்திகேயன் நடித்த 'மனம் கொத்தி பறவை' படத்தில் மாளவிகா பாடிய டங் டங் என்ற பாடல் மிகவும் பிரபலம்.
மேலும் பிரபலமான பாடல்களை பாடி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோவாக பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர அவை வைரலானது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், 'உங்களது வருங்கால கணவர் உங்களை விட இளையவரா ? அல்லது நீங்கள் இளையவரா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மாளவிகா 'அவர் என்னை விட ஒரு வயது இளையவர். அவருக்கு 32 வயதாகிறது' என்று பதிலளித்துள்ளார்.
உங்களை விட வயது குறைவானவரை திருமணம் செய்ய உங்கள் பெற்றோர்களை எப்படி சம்மதிக்க வைத்தீர்கள் ? என்று மற்றொரு ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், எனக்கு திருமணம் ஆகாதா என என் பெற்றோர்கள் காத்திருந்தனர். நான் ஒருவரை பிடித்திருக்கிறது என்றதும் உடனடியாக சம்மதித்தனர் என்று பதிலளித்தார்.
Singer Malavika shared about the age difference between herself and her husband . . pic.twitter.com/WtaduQi38b
— Anbu (@Mysteri13472103) October 30, 2021