
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
உலக அளவில் திரைப்படங்களை மதிப்பிடும் ஐஎம்டிபி தளத்தில் ஜெய் பீம் படம் 53,000 வாக்குகள் பெற்று 9.6 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இரண்டாம் இடத்தில் ஹாலிவுட் திரைப்படமான 'தி ஷஷாங் ரிடம்சன்' என்ற ஹாலிவுட் திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது.
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் குறிப்பிட்ட சாதியை இழிவு செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் அந்தக் காட்சி மாற்றப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், 'ஜெய் பீம்' படத்தில் உண்மையைத் திரித்து கூறியிருப்பதாக கடிதம் மூலம் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சூர்யா அறிக்க ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ''எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் இல்லை. படைப்புச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.
படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம். அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், பெயர் அரசியலால் மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது சுட்டுரைப் பக்கத்தில், ''மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது - அன்புமணிக்கு சூர்யா பதில் !
அதே அன்பான மக்கள், ரசிகர்கள், திரைப்படங்களை விரும்புபவர்கள், உங்கள் எல்லா திரைப்படங்களையும் பார்த்து பெரும் ஆதரவை வழங்குபவர்கள் தான் உங்கள் பொய்யை கேள்வி கேட்கிறார்கள்.
அவர்கள் ஜெய் பீம் படத்தைப் பார்த்தார்கள். சாதியைக் குறிவைக்கும் சில பொய்களைத் தவிர அனைத்தையும் விரும்பினார்கள். இது தான் உண்மை. அவர்கள் உங்கள் சாதிக்காக உங்கள் ரசிகர்கள் அல்ல. உங்கள் திறமைக்கும் நடிப்புக்கும் உங்கள் ரசிகர்கள். உங்களுக்கு நான் உட்பட எல்லா சாதியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
நீங்கள் சினிமா துறையில் பெரிய நடிகர் மற்றும் மரியாதைக்குரிய நடிகர். பொய் சொல்வது கருத்து சுதந்திரமாகிவிட்டதா? ஒரு சாதியை குறிவைப்பது கருத்து சுதந்திரமா? நீங்கள் உண்மைக் கதையை கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறார்கள். நீங்கள் உண்மைகளை கூறலாம். ஆனால் நீங்கள் ஏன் கூறவில்லை?.
உங்கள் திரைப்படம் ஜனநாயகத்திற்கு அடிப்படையாகக் கொண்டதாக இருந்தால், ஏன் திரைப்படத்தில் காலண்டரையும் சில விஷயங்களையும் மாற்ற வேண்டும், ஏனென்றால் அது தவறு. இது தவறு இல்லை என்றால் நீங்கள் விளக்க வேண்டியதில்லை. மேலும் நீங்கள் மக்களால் கேள்வி கேட்கப்பட மாட்டீர்கள். உங்கள் விளம்பரத்திற்காக குறிப்பிட்ட சாதியை தூண்டுவது சரியில்லை. மற்றவர்களின் உண்மைகளை புண்படுத்துவது தவறு. ஒருவரின் பிறப்பு உரிமையை களங்கப்படுத்துவது தவறு. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பது நல்ல எண்ணம். ஆனால் மற்ற சாதியை பற்றி பொய் சொல்வது தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.
’மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது' - அன்புமணிக்கு சூர்யா பதில்!
— Gayathri Raguramm
அதே அன்பான மக்கள், ரசிகர்கள், திரைப்படங்களை விரும்புபவர்கள், உங்கள் எல்லா திரைப்படங்களையும் பார்த்து பெரும் ஆதரவை வழங்குபவர்கள் தான் உங்கள் பொய்யைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள். @Suriya_offlசெய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...