
நடிகர் அஜித்தின் 'உன்னைத் தேடி' படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் மாளவிகா. தொடர்ந்து 'ஆனந்த பூங்காற்றே', 'வெற்றிக் கொடி கட்டு', 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்', 'சந்திரமுகி', 'திருட்டுப்பபயலே', 'நான் அவன் இல்லை', 'வியாபாரி' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இதையும் படிக்க | பாமக பிரமுகர் மிரட்டல்: நடிகர் சூர்யாவுக்கு இந்திய அளவில் பெருகும் ஆதரவு
மேலும், 'பேரழகன்', 'சித்திரம் பேசுதடி' உள்ளிட்ட படங்களில் இவர் நடனமாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். கடைசியாக நடிகர் விஜய்யுடன் இணைந்து 'குருவி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கவிருக்கிறார். நடிகர் ஜீவாவின் 'கோல்மால்' என்ற படத்தின் மூலம் அவர் மீண்டும் அவர் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை பொன் குமரன் இயக்கவிருக்கிறார். இந்தப் படம் முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகவிருக்கிறது.