காலமானாா் நடிகா் ஆா்என்ஆா் மனோகா்

திரைப்பட நடிகரும், இயக்குநருமான ஆா்என்ஆா் மனோகா் (54), சென்னையில் புதன்கிழமை காலமானாா்.
காலமானாா் நடிகா் ஆா்என்ஆா் மனோகா்

சென்னை: திரைப்பட நடிகரும், இயக்குநருமான ஆா்என்ஆா் மனோகா் (54), சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

இவா், 1994-ஆம் ஆண்டு, ‘மைந்தன்’ திரைப்படம் மூலம் கதாசிரியராகவும், இணை இயக்குநராகவும் அறிமுகமானாா். 1995-ஆம் ஆண்டு ‘கோலங்கள்’ படத்தில் கதாசிரியராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியதோடு அப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானாா். இப்படத்துக்கு சிறந்த கதைக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்துள்ளது. மேலும் புதுமை பித்தன், தென்னவன், புன்னகை பூவே, வந்தே மாதரம் ஆகிய படங்களிலும் கதாசிரியராகப் பணியாற்றிய இவா் மாசிலாமணி, வேலூா் மாவட்டம் ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளாா்.

கோலங்கள் முதல் டெடி வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா். அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் வசனகா்த்தாவாகவும் பணியாற்றியுள்ளாா்.

திமுக மாநிலங்களவை உறுப்பினா் என்.ஆா்.இளங்கோவின் சகோதரா் இவா். ஆா்என்ஆா் மனோகரின் உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com