
ராஜமௌலி தற்போது ஜூனியர் என்டிஆர், ராம் சரண் இணைந்து நடித்துள்ள ஆர்ஆர்ஆர்(ரத்தம், ரணம், ரௌத்திரம்) என்ற படத்தை இயக்கியுள்ளார். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்தப் படத்தை தமிழில் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழில் இந்தப் படத்துக்கு கார்கி வசனம் எழுதியுள்ளார். இந்தப் படமம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இருந்து உயிரே பாடல் விடியோ வெளியானது. இந்தப் பாடலை வெளியிட்டு பேசிய இயக்குநர் ராஜமௌலி, ''அண்ணன் மரகதமணி தான் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | சிம்புவுக்கு வெற்றி கொடுக்குமா இந்த 'மாநாடு' ?: படம் எப்படி இருக்கிறது ? திரைப்பட விமர்சனம்
அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப்பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்கு தான் இசையமைப்பார். அப்படி RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மொத்த ஆத்மாவையும் இந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறார்.
மதன் கார்கி இந்தப்பாடல் கேட்டபோதே கண்ணீர் சிந்தி ரசித்தார், அருமையான பாடல் வரிகளை தந்திருக்கிறார். இதை இன்னும் உலகிற்கு காட்டவில்லை, உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி'' என்று தெரிவித்திருந்தார்.