
ஹிந்தியில் 'ராஞ்சனா' படத்துக்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் படம் 'அட்ராங்கி ரே'. தமிழில் இந்தப் படம் 'கலாட்டா கல்யாணம்' என்ற பெயரில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் பொதுவெளியில் திரையிடப்பட்ட 'ஜெய் பீம்': ஆரவாரத்துடன் கண்டுகளித்த மக்கள்
இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இருந்து 'சக்க சக்களத்தி' என்ற விடியோ பாடல் வெளியாகியுள்ளது. ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள இந்தப் பாடலை, யுகபாரதி எழுதியுள்ளார். இந்தப் பாடல் ரசிக்ரகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.