
சிங்கம் 3 படத்துக்குப் பிறகு 'அருவா' என்ற படத்துக்காக நடிகர் சூர்யாவும், ஹரியும் இணையவிருந்தனர். இந்தப் படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சில காரணங்களால் அந்தப் படம் நடைபெறவில்லை.
இதனையடுத்து 'யானை' படத்துக்காக அருண் விஜய்யுடன் இயக்குநர் ஹரி இணைந்தார். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இதையும் படிக்க | உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் வடிவேலு ?
இந்தப் படத்தில் ராதிகா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு தரப்பினர் திட்டமிட்டு வருகின்றனராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படமும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'அருவா' பிரச்னையின் காரணமாக சூர்யாவுடன் மோத இயக்குநர் ஹரி திட்டமிட்டுள்ளாரா? யதார்த்தமாக நடந்ததா என தெரியவில்லை.