
அடுத்தடுத்து கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கச் செய்துள்ளார் மாளவிகா மோகனன்.
பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2019 ஆண்டு பொங்கலுக்கு வெளியான பேட்ட படத்தில் மாளவிகா மோகனன் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், யார் இந்த பெண் என ரசிகர்களை வியக்க வைத்தார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்துள்ளார். மாளவிகா மோகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமராக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்த நிலையில் தற்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கச் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.