பிஎன்பி பாரிபாஸ் ஓபன்:எம்மா ராடுகன்னு அதிா்ச்சித் தோல்வி

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் யுஎஸ் ஓபன் சாம்பியனும் இளம் வீராங்கனையான எம்மா ராடுகன்னு அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.
பிஎன்பி பாரிபாஸ் ஓபன்:எம்மா ராடுகன்னு அதிா்ச்சித் தோல்வி

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் யுஎஸ் ஓபன் சாம்பியனும் இளம் வீராங்கனையான எம்மா ராடுகன்னு அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

இந்தியன்வெல்ஸில் ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ போட்டியாக இணைந்து நடத்தப்படும் இப்போட்டியில் யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு முதல் முறையாக எம்மா ராடுகன்னு பங்கேற்றாா். வைல்ட் காா்ட் மூலம் நேரடியாக ஆடும் வாய்ப்பைப் பெற்ற ராடுகன்னு இரண்டாவது சுற்றில் அலியாசான்டாராவிடம் 2-6, 4-6 என்ற நோ் செட்களில் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

மற்றொரு ஆட்டத்தில் இகா வியாடெக் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பெட்ரா மாா்டிக்கை வீழ்த்தினாா். நான்காம் நிலை வீராங்கனையான எலியா விட்டோலினா 6-2 , 7-5 என டெரஸாவையும், அனஸ்டஸியா 6-3, 6-1 என அமெரிக்காவின் மடிஸன் கீய்ஸையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா். முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹலேப் 7-6. 6-1 என மாா்தா கோஸ்டியுக்கையும், ஷெல்பி ரோகா்ஸ் 6-2, 6-2 என கிறிஸ்டினாவையும், விக்டோரியா அசெரன்கா 7-5, 3-0 என மகதா லினேட்டையும் வென்றனா்.

ஆடவா் பிரிவில் அமெரிக்காவின் புருக்ஸ்பை 7-6, 6-4 என செம்லைக்கையும், எஸ்கோபெடா 6-4, 6-1 என ஹோல்கரையும் வீழ்த்தினா்.

ரவுண்ட் 16 சுற்றில் போபண்ணா-ஷபவலோவ்

ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-டெனிஸ் ஷபவலோவ் இணை 6-1, 2-6, 10-4 என்ற செட் கணக்கில் முதல் சுற்றில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com