திரையரங்குகளில் நாளை(செப்-10) வெளியாகிறது ‘தலைவி’

பிரபல ஹிந்தி நடிகையான கங்கனா ரணாவத்தின் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும்  'தலைவி' திரைப்படம் நாளை (செப்-10) வெளியாகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி 'தலைவி' திரைப்படம் உருவாகியிருக்கிறது. சாதாரண நிலையில் இருந்து அரசியலில் நெருங்க முடியாத உயரத்திற்குச் சென்ற ஒரு பெண்ணின் ஆளுமையைச் சொல்லும் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிற இப்படத்தின் 'டிரைலர்' சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

பெரும் பொருட்செலவில் பெரிய நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை கரோனாவால் திரையிட முடியாமல் இருந்தனர்.மேலும் ஓடிடி பிரச்னையில் இருந்து மீண்டு வந்த ’தலைவி’ திரைப்படம்  திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் நாளை (செப்-10) வெளியாகிறது.

ஜெயலலிதாவாக நடித்த கங்கனாவுடன் அரவிந்த் சாமி (எம்ஜிஆர்) , நாசர் (கருணாநிதி) , சமுத்திரக்கனி (ஆர்.எம் வீரப்பன்) , மதுபாலா (ஜானகி ராமச்சந்திரன்) , பூர்ணா (சசிகலா) , தம்பி ராமையா (நடராஜன்) போன்ற நடிகர்கள் வலுவான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விப்ரி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com