'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது': பிஎம்டபிள்யூ கார் வாங்கிய மணிமேகலை

சொந்த முயற்சியில் பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளதாகப் பிரபல தொகுப்பாளர் மணிமேகலை பெருமிதமாகப் பதிவு எழுதியுள்ளார்.
'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது': பிஎம்டபிள்யூ கார் வாங்கிய மணிமேகலை

சொந்த முயற்சியில் பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளதாகப் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலை பெருமிதமாகப் பதிவு எழுதியுள்ளார்.

மணிமேகலையும் திரைப்பட நடனக் கலைஞர் ஹுசைனும் 2017 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்கள். காதலர் ஹுசைனைத் திருமணம் செய்ய தன்னுடைய தந்தை சம்மதிக்காததால் பதிவுத் திருமணம் செய்துகொண்டார் மணிமேகலை. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பங்கேற்றுள்ள மணிமேகலை, பாரதி கண்ணம்மா தொடரில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார் மணிமேகலை. இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

மணிமேகலையின் சொந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 கார். எனக்குப் பிடித்த, கனவு கார். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வந்துள்ளது என்றார்.

இன்ஸ்டகிராமில் இதற்கு கமெண்ட் செய்த தொகுப்பாளர் ஃபரினா, நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது என சூர்யவம்சம் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டார். இதற்குப் பதில் அளித்த மணிமேகலை, எனக்குத் தெரியும், நீ இந்தப் பாட்டைத்தான் போடுவாய் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com