விபத்தில் பலியான தோழியுடன் எடுத்த விடியோ: யாஷிகாவின் உருக்கமான பதிவு

ஒருநாளைக் கூட சுலபமாகவோ உன்னைப் பற்றி நினைக்காமலோ கடக்க முடியவில்லை.
விபத்தில் பலியான தோழியுடன் எடுத்த விடியோ: யாஷிகாவின் உருக்கமான பதிவு

காலத்தின் பின்னால் சென்று அனைத்தையும் மாற்ற விரும்புகிறேன் என கார் விபத்து பற்றி நடிகை யாஷிகா பதிவு எழுதியுள்ளார்.

பிக் பாஸ் தொலைக்காட்சி மூலமாகப் பிரபலமான நடிகை யாஷிகா, சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் காரில் சென்றார் யாஷிகா. அப்போது மகாபலிரபும் அருகே யாஷிகாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் காலில் உள்ள எலும்புகள் உடைந்தன. விபத்துக்குப் பிறகு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா, தற்போது சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். 

இன்ஸ்டகிராமில் தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா. இரு கால்களில் பெரிய கட்டுடன் படுக்கையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, என் வலிமை என்று எழுதியுள்ளார். படுக்கையின் அருகில் அவருடைய செல்ல நாயும் உள்ளது. 

மேலும் விபத்தில் மறைந்த தனது தோழியான பவானியுடன் எடுத்த சிறிய விடியோவை வெளியிட்டு உருக்கமாகப் பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

என்னுடைய மிகப்பெரிய நலம்விரும்பி, என் சகோதரி.  உன்னை நான் மிஸ் செய்கிறேன். ஒருநாளைக் கூட சுலபமாகவோ உன்னைப் பற்றி நினைக்காமலோ கடக்க முடியவில்லை. காலத்தின் பின்னால் சென்று அனைத்தையும் மாற்ற விரும்புகிறேன். நீ எங்களை விட்டுப் பிரியும் முன்பு அளித்த நினைவுகளுக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நீ ஒரு தேவதையாக எங்களை மேலே இருந்து கவனிக்கிறாய். நீ ஒரு ரத்தினம். நான் உடைத்துவிட்டேன். உன்னையும் நம் நினைவுகளையும் எப்போதும் மிஸ் செய்வேன். நீ இனிமேல் இங்கு இல்லை என்பதை இதயம் நம்ப மறுக்கிறது. உணவு, மேக்கப் பற்றி நீ பேசுவதையும் நான் உன்னைச் செல்லமாக அடிப்பதையும் என எல்லாவற்றையும் மிஸ் செய்கிறேன். நீ நல்ல இடத்தில் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன். விரைவில் உன்னை நான் சந்திப்பேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com