பெரியார் நூலைப் பரிந்துரைக்கும் இளம் நடிகை

பெண் ஏன் அடிமையானாள் என்கிற புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்...
பெரியார் நூலைப் பரிந்துரைக்கும் இளம் நடிகை


பெரியாரின் பிறந்த நாளான இன்று தமிழக அரசின் சார்பில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலையிலுள்ள அவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

கேரளத்தைச் சேர்ந்த நடிகையான மிர்னா, 2016-ல் பட்டதாரி என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதிதி மேனன் என்கிற தனது பெயரை மிர்னா என மாற்றிக் கொண்டார். பிறகு களவாணி மாப்பிள்ளை என்கிற படத்தில் நடித்த மிர்னா, பிக் பிரதர் என்கிற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கவுள்ள சந்தன தேவன் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

பெரியாரின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி ட்விட்டரில் பதிவு எழுதியுள்ளார் மிர்னா. அவர் எழுதியதாவது:

தந்தை பெரியாரை அவருடைய பிறந்த நாளான இன்று நினைவுகூர்கிறேன். பெண் ஏன் அடிமையானாள் என்கிற புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன் என்று எழுதியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com