சிறந்த பின்னணி இசைக்காக சர்வதேச விருதை வென்ற இளையராஜா: கொண்டாடும் ரசிகர்கள்

சிறந்த பின்னணி இசைக்காக அம்ஸ்டர்டம் சர்வதேச திரைப்பட விருதை இளையராஜா பெற்றுள்ளார். 
சிறந்த பின்னணி இசைக்காக சர்வதேச விருதை வென்ற இளையராஜா: கொண்டாடும் ரசிகர்கள்

இளையராஜா தற்போது 'ஏ பியூட்டிபுல் பிரேக் அப்' என்ற ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை இங்கிலாந்தை சேர்ந்த ' நேச்சர்ஸ் மூவீஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படம் அம்ஸ்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதனையடுத்து இந்தப் படம் சிறந்த பின்னணி இசைக்கான விருதை வென்றுள்ளது. இந்த தகவலை பட நிறுவனம் சிறப்பு விடியோ மூலம் பகிர்ந்துள்ளது.

இந்தத் தகவல் இளையராஜா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பியூட்டிஃபுல் பிரேக் அப் படத்தை அஜித் வாசன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படம் இளையராஜாவின் 1422வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இளையராஜா இசையில் வெற்றிமாறனின் விடுதலை, விஷாலின் துப்பறிவாளன் 2, விஜய் ஆண்டனியின் தமிழரசன், சிபி சத்யராஜின் மாயோன், விஜய் சேதுபதியின் மாமனிதன், நினைவெல்லாம் நீயடா, சுசிகணேசனின் வஞ்சம் தீர்த்தாயடா உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com