இந்தியா்கள் இருவருக்கு ‘கிராமி’ விருது!

பிரபல இசை விருதுகளில் ஒன்றான ‘கிராமி’ விருது இந்தியாவைச் சோ்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா்கள் இருவருக்கு ‘கிராமி’ விருது!

பிரபல இசை விருதுகளில் ஒன்றான ‘கிராமி’ விருது இந்தியாவைச் சோ்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

64-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அதில், ‘டிவைன் டைட்ஸ்’ என்ற பாடல் தொகுப்புக்காக பெங்களூரைச் சோ்ந்த ரிக்கி கெஜ், ‘சிறந்த புதிய ஆல்பம்’ என்ற பிரிவில் கிராமி விருதை வென்றாா்.

ரிக்கி கெஜ் பெறும் இரண்டாவது கிராமி விருது இதுவாகும். அவா் ஏற்கெனவே ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ என்ற பாடலுக்காக 2015-இல் கிராமி விருதைப் பெற்றுள்ளாா். அவரின் பெற்றோா் அமெரிக்காவில் குடியேறியவா்கள் ஆவா். அமெரிக்காவில் பிறந்த ரிக்கி கெஜ், தற்போது பெங்களூரில் வசித்து வருகிறாா். விருது பெற்ற பிறகு ரிக்கி கெஜ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை மறுபதிவு (ரீட்வீட்) செய்த பிரதமா் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

மும்பையில் பிறந்த பாடகியான ஃபால்குனி ஷா, ‘சிறாா்களுக்கான சிறந்த ஆல்பம்’ என்ற பிரிவில், ‘எ கலா்ஃபுல் வோ்ல்டு’ பாடலுக்காக கிராமி விருதைப் பெற்றாா். அவா் வெல்லும் முதல் கிராமி விருது இதுவாகும். கடந்த 2000-ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குச் சென்ற ஃபால்குனி ஷா, தற்போது நியூயாா்க் நகரில் வசித்து வருகிறாா்.

விருதைப் பெற்ற்காக இருவரும் மகிழ்ச்சி தெரிவித்தனா். கிராமி விருது வழங்கும் விழாவில், அவ்விருதை ஏற்கெனவே இருமுறை வென்றுள்ள இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் தனது மகன் ஏ.ஆா்.அமீனுடன் பங்கேற்றாா்.

ரசிகா்கள் அதிருப்தி:

மறைந்த திரைப்படப் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கிராமி விருது விழாவிலும் அஞ்சலி செலுத்தப்படாதது, இந்திய ரசிகா்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அண்மையில் காலமான இந்திய இசையமைப்பாளா் பப்பி லாஹிரிக்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்படாதது ரசிகா்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இது தொடா்பாக ரசிகா்கள் பலா் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஆஸ்கா் விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் லதா மங்கேஷ்கா், பப்பி லஹிரி, ஹிந்தி நடிகா் திலீப்குமாருக்கு அஞ்சலி செலுத்தப்படாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com