
பாலிவுட் பிரபலங்களான ரன்பீரும் ஆலியாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், கரோனா ஊரடங்கு இல்லையென்றால் எங்கள் திருமணம் நடைபெற்றிருக்கும் என்றும் ரன்பீர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவர்களது திருமணம் பஞ்சாபி முறையில் நடைபெறவிருக்கிறது. இவர்களது திருமண சடங்குகள் வருகிற 13 ஆம் தேதியே துவங்குகிறது எனவும் ஏப்ரல் 17 ஆம் தேதி இவர்களது திருமணம் எளிய முறையில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்
முன்னதாக ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே மற்றும் விக்கி கவுசல் - கேத்ரீனா கைஃப் திருமண கொண்டாட்டங்கள் ஹிந்தி திரையுலகத்தை கலக்கின என்பது குறிப்பிடத்தக்கது. ரன்பீர் - ஆலியா திருமணத்துக்கு இருவருக்கும் மிக நெருங்கிய பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது திருமணம் மும்பை செம்பூரில் நடைபெறவிருக்கிறது.