
'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் தளபதி 66 படத்தில் நடிக்கவிருக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜயக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தயாரிப்பாளர் தில் ராஜு 'பூவே உனக்காக' படத்தைப் போல குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | ''எங்க அண்ணே..'' விஜய்யின் ரசிகன் என ஷாருக்கானின் பதிவுக்கு அட்லி பதில்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பூஜை இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. பூஜையில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா, தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.