
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இந்திய அளவில் டிரெண்டானது. தற்போது இந்தப் படத்திலிருந்து 3 வது பாடல் நாளை (ஏப்ரல் 8) வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தமிழகத்தில் பீஸ்ட் படத்தை வெளியிடுகிறார். இந்தப் படத்தின் டிக்கெட் முன் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதையும் படிக்க | விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' - படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்
பீஸ்ட் படத்துடன் கேஜிஎஃப் படமும் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி படத்துக்கு பிறகு தென்னிந்திய படங்களுக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு படங்களும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Adutha sambavam loading! #BeastThirdSingle #BeastMode is releasing Tomorrow!@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @manojdft @Nirmalcuts #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/72mWNHqpIR
— Sun Pictures (@sunpictures) April 7, 2022