
'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்களின் மூலம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் இயக்குநர் மோகன்.ஜி. தற்போது இயக்குநர் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்கும் படத்தை மோகன்.ஜி இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் நட்டி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'கேஜிஎஃப் 2' - திரை விமர்சனம்: பீஸ்ட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
இதுகுறித்து சாம சிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், நல்ல கதைக்களமும், திரைக்கதையும கொண்ட இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் இணைவதில் மகிழச்சி என்று தெரிவித்துள்ளார்.
நல்ல கதைகளமும், திரைக்கதையும் கொண்ட இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் இணைவதில் மகிழ்ச்சி
—
நன்றி @mohandreamer @selvaraghavan @natty_nataraj @Gmfilmcorporat1 https://t.co/DLm5MTdN13