
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் நேற்று (ஏப்ரல் 13) வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
இந்தப் படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன். நெல்சன் திலிப்குமார் அண்ணா, அனிருத், பூஜா ஹெக்டே, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | 'கேஜிஎஃப் 2' - திரை விமர்சனம்: பீஸ்ட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
பீஸ்ட் படத்தில் அனிருத்தின் பாடல்கள் நன்றாக படமாக்கப்பட்டிருப்பதாக பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. பெரும்பாலான ரசிகர்கள் தங்களை பீஸ்ட் படம் கவரவில்லை என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர். அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Enjoyed watching #Beast and @actorvijay sirVazthukkal @Nelsondilpkumar na @anirudhofficial sir @hegdepooja @manojdft sir and the entire team
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 13, 2022
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...