நடிகர் மாயி சுந்தர் மறைவு: மன்னார்குடியில் இன்று மாலை இறுதிச்சடங்கு

துணை நடிகர் மாயி சுந்தர் இறுதி நிகழ்ச்சி இன்று மாலை மன்னார்குடியில் நடைபெறுகிறது
நடிகர் மாயி சுந்தர் மறைவு: மன்னார்குடியில் இன்று மாலை இறுதிச்சடங்கு

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் பலரால் அறியப்பட்ட துணை நடிகர் மாயி சுந்தர் (51) உடல் நலக் குறைவு காரணமாக (டிச.24) சனிக்கிழமை அதிகாலை காலமானார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருத்துறைப்பூண்டி சாலையில் வசித்து வரும் முத்துகுமார் - சாந்தி தம்பதியருக்கு 2 மகன்கள், ஒரு மகள். இதில் இளைய மகன் ஏற்கனவே இறந்துவிட்டார்.

மூத்த மகன் சுந்தர், திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னையில் தங்கி அதற்கான முயற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். ஓரே மகளுக்கு திருணம் முடிந்து அவர் வயதான பெற்றோரை பராமரித்துக்கொண்டு மன்னார்குடியிலேயே குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

சரத்குமார் நடித்த மாயி திரைப்படத்தில் முதல் முறையாக துணை நடிகர் வேடத்தில் நடிக்க சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்ததையடுத்து, தனது பெயருக்கு முன்னாள் மாயி சுந்தர் என மாற்றிக்கொண்டு வெண்ணிலா கபடிக் குழு, ரன், குள்ளநரி கூட்டம், துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகர் வேடத்தில் நடித்துள்ளார்.

அண்மைகாலமாக மஞ்ச காமாலை நோயால் மாயி சுந்தர் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கியும் மற்றும் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்த வந்த நிலையில் நோயின் தாக்கம் வெள்ளிக்கிழமை இரவு அதிகரித்தையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் மாயி சுந்தர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மறைந்த மாயி சுந்தரம் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது உடல், உறவினர்கள் நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக மன்னார்குடியில் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள அவரது இல்லதில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (டிச.24) மாலை 5 மணிக்கு மன்னார்குடி கீழப்பாலம் நகராட்சி மயானத்தில் உடல் எரியூட்டப்படுகிறது.

மேலும் விவரம் அறிய...  98424 58289

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com