
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர்.
இசை வெளியீட்டு விழா முடிந்து ராஷ்மிகா காரில் சென்று கொண்டிருக்கும்போது அவரை ஒரு ரசிகர் இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளார். அப்போது காரினை நிறுத்தி, “தயவு செய்து தலைக்கவசம் அணியவும். பாதுகாப்பாக இருக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டு கிளம்பினார். இதனை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அந்த ரசிகர். அவர் பகிர்ந்த பதிவில் ராஷ்மிகா தனது ரசிகர்களை மதித்து அவர்களின் மீது அக்கறை காடிய விதத்தினால் இதயத்தை வென்று விட்டதாக ராஷ்மிகா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ராஷ்மிகா விரைவில் ரசிகர்களை ஆன்லைனிலாவது சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
The way she Loves and cares his fans @iamRashmika #RashmikaMandanna pic.twitter.com/ITbGllbDwU
— +мя.ρσѕιтινιту+