ஆஸ்கர் விழாவில் பங்கேற்போர் தடுப்பூசி சான்று சமர்பிக்க தேவையில்லை

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்போர் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்பிக்க தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விழாவில் பங்கேற்போர் தடுப்பூசி சான்று சமர்பிக்க தேவையில்லை

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்போர் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்பிக்க தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா துறையில் சிறந்த நட்சத்திரங்கள், படைப்புகளை கெளரவிக்கும் வகையில் ஆஸ்கர் விருதை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்சஸ் வழங்கிவருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் வரும் மார்ச் 27ஆம் தேதி 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு விழாவின் போது கரோனா பரவல் காரணமாக பங்கேற்பாளர்களுக்கு கட்டாய முகக்கவசம், கரோனா தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிகழ்வாண்டு விழாவில் பங்கேற்போர் கரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர்.  

மேலும், விருது நிகழ்விற்கு வருவதற்கு முன்பாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், கரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் பங்கேற்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com