
விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் திரைப்படம் நாளை (பிப்ரவரி 11) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்தப் படத்தில் கௌதம் மேனன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | சிம்பு வெளியிட்ட வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை' கிளிம்ப்ஸ் வீடியோ
இந்த நிலையில் இந்தப் படம் குவைத், மலேசியா, கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்த கருத்துகள் இருப்பதால் இந்தப் படம் தடை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
— IRFAN AHMED (ABA) (@TheVishnuVishal) February 10, 2022
Sorry #MALAYSIA and #KUWAIT audience... https://t.co/mUDZA3mJK4