
சமூக நீதி கருத்துகளை தங்கள் திரைப்படங்களின் மூலம் வலியுறுத்தும் இயக்குநர்களில் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் குறிப்பிடத்தகுந்தவர்கள். பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான பரியேறும் பெருமாள் மூலமே மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் இயக்குவதாக இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்துக்கான முன்கட்ட தயாரிப்பு பணிகளில் மாரி செல்வராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்துக்கு பிறகு, பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க | வைரலாகும் சமந்தாவின் ‘அரபிக் குத்து’ நடனம்
இந்த நிலையில் மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில் பா.ரஞ்சித் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, உன்னதமான இளைப்பாறுதளுக்கு நிலைத்த அன்பில் பருகும் தேநீர் போதுமானது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.